Pages

Wednesday, February 17, 2010

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

பிள்ளைக் கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என்முன்னே ஆடி வரும் தேனே கண்ணம்மா

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவித் தழுவுதடி

உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தம் இட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோன் கண்ணம்மா உன்மத்தமாகுதடி

சற்று முகம் சிவந்தால் மனது சஞ்சலம் ஆகுதடி
நெற்றிச் சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பார்வையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பிலே எனது முகந்தவிர்திடுவாய்

இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ

மார்பிலனாவதர்க்கே உன்னைப்போல் வைரமணிக் கல்லுண்டோ
சீர் பற்றி வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வப்பிரிதுமுண்டோ

1 comment:

  1. Got into your blog through random links....
    Read all the posts on Sharadha...touched, blinded with tears and filled with an inexplicable feeling seeing your tribute to the baby, and keeping her alive forever through these posts.
    She is up there, as your guardian angel, looking after you all.

    And now, my love to her too...God Bless you baby.

    ReplyDelete